நாய்க்கு கூட சொத்தில் பங்கு உண்டு.. !! ட்ரம்ப்க்கு கிடையாது..!! வெளிவந்த முதல் மனைவி உயில் ரகசியம் !!

 
இவானா

அமெரிக்காமுன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். டொனால்ட் ட்ரம்புக்கு மொத்தம் 3 மனைவிகள். முதல் மனைவி பெயர் இவானா மேரி. இவர்கள் இருவரும் கடந்த 1977ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மாடலாக இருந்த இவானா மேரி, டொனால்ட் ட்ரம்ப்பை மணம் முடித்தார். இந்த தம்பதிக்கு 2 மகன், ஒரு மகள் பிறந்தனர். அதன்பிறகு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

இதையடுத்து 1993ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் 2வது திருமணம் செய்தார். 2ஆவதாக நடிகை மார்லா மேப்பிள்ஸை அவர் கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு டிப்பனி என்ற மகள் பிறந்தாள். இவரை ட்ரம்ப் 1999 ல் விவாகரத்து செய்தார். இதையடுத்து 2005ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் மெலனியாவை 3ஆவது திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு பாரோன் என்ற மகன் உள்ளார். தற்போது இவருடன் தான் ட்ரம்ப் வாழ்ந்து வருகிறார்.
இவானா

இந்நிலையில் தான் டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவி இவானா கடந்த ஆண்டு காலமானார். வீட்டில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்த இவானாவின் சொத்து விபரம் மற்றும் அவரது உயில் ரகசியம் தற்போது வெளியாகி உள்ளது.

அவரது உயிலில் இவானா தனது 2 மகன்கள், ஒரு மகள் ஆகியோருக்கு சரிசமமாக சொத்துகளை சரிசமமாக பிரித்து வழங்கிஉள்ளார். மேலும் அவரது குழந்தைகளை சிறுவயதில் கண்ணும் கருத்துமாக பார்த்து பார்த்து வளர்த்தவருக்கும், ஆசையாக வளர்த்த நாய்களுக்கு கூட சொத்தில் பங்கு வழங்கி உள்ள நிலையில் தனது முன்னாள் கணவரான முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எந்த பங்கும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவானா

அதன்படி இவானாவுக்கு மொத்தம் 34 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சொத்து இருந்தது. இதன் இந்திய மதிப்பு என்பது சுமார் ரூ.280 கோடியாகும். இந்த ரூ.280 கோடி சொத்துகளை தான் இவானா உயில் எழுதி வைத்துள்ளார். இதுதவிர அவர் இறந்தபோது வீட்டில் வளர்க்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சொத்துகளில் குறிப்பிட்ட பகுதிகளை வழங்க வேண்டும் உயிலில் குறிப்பிட்டு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இதுமட்டுமின்றி அவரது உதவியாளரும், இவானாவின் குழந்தைகளை சிறுவயதில் நன்கு கவனித்து கொண்ட சுஜனா டோரதி கரிக்கு, மியாமி கடற்கரைக்கு அருகே உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை இவானா எழுதி வைத்துள்ளார்.

இந்த சொகுசு அடுக்குமாடி வீட்டின் மொத்த மதிப்பு என்பது இந்திய ரூபாயில் 9 கோடியாகும். இது 1000 சதுரஅடியில் 2001ல் கட்டப்பட்டது. இதனை 2009ல் இவானா ரூ.5.25 கோடிக்கு வாங்கிய நிலையில் சுஜனாவுக்கு அவர் எழுதி வைத்துள்ளார்.

இவானா

இவ்வாறு வீட்டில் வளர்த்த செல்ல பிராணிகள், குழந்தைகளை கவனித்து உதவியாளராக மாறி சுஜனாவுக்கு கூட தனது கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை எழுதி வைத்த இவானா டொனால்ட் ட்ரம்புக்கு எதையும் கொடுக்கவில்லை என்பதுதான் தற்போது அமெரிக்காவில் ஹாட்டாபிக்.

From around the web