மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த ஊழியர்.. புகார் அளித்த பள்ளி முதல்வர் !!

 
school

10ஆம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் எடுத்த தனியார் பள்ளி ஊழியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்ற எட்வின் (21) என்ற இளைஞர் உதவியாளராக பணி புரிந்து வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் தொடர்ச்சியாக பேசி வந்துள்ளார். 

school

அதேபோல், பள்ளி வளாகத்தில் நின்று அந்த மாணவியிடம், சசிகுமார் பேசி கொண்டிருந்தார். அப்போது மாணவி பயப்படும் தோணியில் பேசியதை கண்ட பள்ளியின் முதல்வர், சசிகுமாரை அழைத்து விசாரித்துள்ளார். பின்னர் அவரின் செல்போனை வாங்கி சோதனை செய்தபோது பள்ளி முதல்வர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
school

சசிகுமாரின் செல்போனில், அந்த மாணவியின் ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்தது. பள்ளி மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அதனை செல்போனில் வைத்திருப்பது தெரியவந்தது. அவ்போது மாணவியை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பள்ளியின் முதல்வர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

கைதான சசிகுமாரிடம் இருந்து செல்போனை பறித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web