பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

 
மிதிலேஷ்

பிரபல பாலிவுட் நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி மாரடைப்பு காரணமாக மும்பையில் இன்று காலமானார். அவரது மறைவால் அதிர்ச்சியடைந்த திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


பாலிவுட் நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார். இவருக்கு வயது 68. இவரது மருமகன் நடிகர் மிதிலேஷின் மறைவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மிதிலேஷ்

பல்வேறு திரைப்படங்களில் நடித்த மிதிலேஷ் சதுர்வேதி, ஏக் ப ரேம் கதா, கோய் மில் கயா, மை பிரெண்ட் பின்டோ, படா போஸ்டர் நிக்லா ஹீரோ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் திரைப்பட வினியோகஸ்தராகவும் இருந்து பல்வேறு படங்களை வெளியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இவர் கடந்த 1992ம் ஆண்டு பட்டியாலா பேப்ஸ் மற்றும் ராம்ஜெத் மலானியாக தோன்றிய தொடர் உள்ளிட்ட சில வெப் தொடர்களில் நடித்தார். இவர் கடைசியாக நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து குலாபே சிடாபோ மற்றும் ஆயுஷ்மான் குரானா என்ற படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிதிலேஷ்
தனது தனித்தன்மை வாய்ந்த நடிப்பின் மூலம் ரசிகர்கள் கூட்டத்தை பெற்றிருந்த நடிகர் மிதிலேஷ் சதுர்வேதியின் மறைவு செய்தி அறிந்த திரையுலகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரது நினைவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web