பிரபல நடிகர் காலமானார்! திரையுலகினர் இரங்கல்!

 
லோஹிதாஸ்வா

பிரபல கன்னட திரைப்பட நடிகர் லோஹிதாஸ்வா காலமானார். இவருக்கு வயது 80. இவர் துமகூரு தொண்டகரேவை சேர்ந்தவர். பிரபல திரைப்பட நடிகராக மட்டுமின்றி கல்லூரிகளில் ஆங்கில பேராசிரியராகவும் லோஹிதாஸ்வா பணியாற்றியுள்ளார். 100க்குப் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள லோஹிதாஸ்வா அபிமன்யூ, ஏ.கே.47, அவதார புருஷா, சின்னா, ஹொச நீரு, கஜேந்திரா, விஸ்வா, பிரதாப், போலீஸ் லாக்கப், ரெடிமேட் கண்டா, ஸ்நேகா லோகா, சுந்தரகாண்டா, சிம்ஹத மரி, மூரு ஜன்மா, டைம் பாம் உட்பட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

லோஹிதாஸ்வா

பல டிவி தொடர்களிலும் நடித்து, லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த இவர், பெங்களூரில் வசித்து வந்த நிலையில், கடந்த மாதம் அக்டோபர் 10ம் தேதி நடிகர் லோஹிதாஸ்வாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே குமாரசாமி லே அவுட்டில் உள்ள சாகர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். இவரது இறப்பிற்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.லோஹிதாஸ்வா உடல், குமாரசாமி லே அவுட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின், சொந்த கிராமத்தில் இறுதி சடங்கு நடத்தப்பட்டதாக அவரது மகன் சரத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web