கஞ்சா வேட்டை தொடரும்!! ரவுடியிசம் ஒழிக்கப்படும்!! புதிய பெண் காவல் ஆணையர் அதிரடி பேட்டி!!

 
சத்யா

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசானது முதல் கட்டமாக 25க்கும் அதிகமான ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.அதில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்றிய கார்த்திகேயன் மத்திய மண்டல ஐஜியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஐஜியாக பணியாற்றிய சத்ய ப்ரியா என்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.திருச்சி மாநகர காவல் துறை ஆணையர்களாக ஏற்கனவே 31 ஆணையர்கள் பணியாற்றிய நிலையில், திருச்சி மாநகரத்தின் 32 வது ஆணையராகவும் முதல் பெண் ஆணையராகவும் சத்ய பிரியா ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஐபிஎஸ்

திருச்சி மாநகரத்திற்கு முதல் பெண் காவல் ஆணையர் என்ற பெருமையை சத்ய பிரியா ஐபிஎஸ் பெற்றுள்ளார்.இன்று பொறுப்பேற்ற மாநகர காவல் துறை ஆணையர் சத்ய பிரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ..... திருச்சி மாநகரத்தில் கஞ்சா புழக்கத்தை முழுமையாக ஒழிக்கவும் ரவுடிசத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக கஞ்சா ,பான் மசாலா,குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளை ஒழிப்பதற்கு பல புதிய திட்டங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மகளிர் போலீஸ்
அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்து ஆலோசித்த அவர் நீங்கள் தற்போது செய்து வரக்கூடிய பணிகளை வெறுப்பு வெறுப்பு இல்லாமல் தொடர்ந்து பணியாற்றுங்கள் எந்த பிரச்சனைகள் தொடர்பாகவும் நீங்கள் எந்த நேரத்திலும் என்னை அணுகலாம். அதே போல் மாநகரில் ஏற்படக்கூடிய ரவுடிசம் கஞ்சா உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுங்கள் முடிந்தவரை காவல் நிலையங்களில் வரக்கூடிய மனுக்களை முறையாக பெற்று அதனை விசாரித்தால் பல பிரச்சினைகள் தீரும் என அறிவுரை வழங்கினார்.

கடந்த ஆண்டு 188 குண்டாஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து குற்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு அதை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மாநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அவற்றின் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையும் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி இருக்கக்கூடிய இளைஞர்களை திருத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல் மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது அவற்றை தடுப்பதற்கு அவ்வப்போது அதிரடி சோதனைகள் நடத்தப்படும் என்றும், குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

From around the web