பேருந்தின் கண்ணாடி உடைப்பு!! ஓட்டுனர் படுகாயம்!! பரபரக்கும் திருவண்ணாமலை!!

 
பேருந்து

 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையதில் இருந்து 50 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. திருவண்ணாமலை அரசு பணிமனைக்குச் சொந்தமான அரசு பேருந்தை ஓட்டுநர் முருகன் (45) ஓட்டினார். நள்ளிரவு 1  மணியளவில் செஞ்சியில் பயணிகளை இறக்கிவிட்டு திருவண்ணாமலை நோக்கிச் சென்றது. 

பேருந்து

அப்போது பேருந்து செஞ்சி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே சென்றபோது, அங்கு அதே பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வரும் கொழப்பலுாரைச் சேர்ந்த விநாயகசுந்தரம் (55), திடீரென பேருந்து மீது கல் வீசினார். இதில் பேருந்தின் முன் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதில் ஓட்டுநர் முருகனுக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் கீழே இறங்கி, நடத்துநர் வினாயகசுந்தரத்தை பிடிக்க முயன்றனர். அவர் செஞ்சி பணிமனை உள்ளே நேர காப்பாளர் அறைக்குள் சென்று பாதுகாப்பாக அமர்ந்து கொண்டார். அங்கு சென்ற பயணிகள், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அவர், “நான் என் ஊருக்குச் செல்ல 5 பேருந்துக்களை நிறுத்த முயற்சித்தேன், ஆனால், யாரும் நிறுத்தவில்லை, அதனால் பேருந்து மீது கல் வீசினேன்” என அலட்சியமாக கூறினார்.

திருவண்ணாமலை

ஆத்திரமடைந்த பயணிகள் சிலர், நடத்துநரை தாக்க முயன்றபோது அங்கிருந்த போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார், பயணிகளை சமாதானம் செய்து மாற்று பேருந்தில் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்தனர்.காயமடைந்த ஓட்டுநர் முருகன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து செஞ்சி கிளை மேலாளர் சுரேஷ், செஞ்சி போலீசில் நேற்று புகார் அளித்தன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web