நீதிமன்ற வளாகத்தில் மனைவி கழுத்தை அறுத்து கொலை !! கணவன் பகீர் வாக்குமூலம்!!

 
சிவக்குமார்


கர்நாடக மாநிலம் ஹொலேநரசிப்பூர் நகரில்  ஹாசன் மாவட்டத்தில் உள்ள தட்டேகெரே கிராமத்தில் வசித்து வருபவர்  சைத்ரா .இவரது கணவர் ஹோலேநரசிபுரா தாலுகாவில் வசித்து வரும் சிவகுமார். இவர்கள் இருவரும் நேற்று  பெங்களூருவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கில் ஆஜராக வந்திருந்தனர்.சிவகுமாருக்கும், சைத்ராவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் . இருவருக்கும் இடையில் இருந்து வந்த கருத்து வேறுபாடு தகராறாக மாறி சட்டப்படி பிரிய முடிவு செய்தனர். அவரது தொல்லை தாங்க முடியாமல், கடைசியாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகிய சைத்ரா, 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் மீது ஜீவனாம்சம் வழக்கும் தொடர்ந்துள்ளார். 

சைத்ரா
இந்நிலையில், நேற்று இவர்கள் இருவரையும்  சமாதானம் செய்வதற்காக நீதிமன்றம் வரவழைக்கப்பட்டனர். நீதிபதியின் அறிவுரையை கேட்டு 2 குழந்தைகளுக்காக மனைவியுடனான கருத்து வேறுபாடுகளை மறந்து சிவக்குமார் வாழ்வதாக நீதிமன்றத்தில் உறுதி அளித்தார். சமாதானத்திற்கு ஒப்புக்கொண்ட சிவக்குமார் தனது மனைவியை கழிவறைக்கு அழைத்துச் சென்று கூர்மையான கத்தியை கொண்டு கழுத்தை அறுத்து விட்டார். சைத்ரா அழைத்து வந்த குழந்தையையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். 
மனைவி சைத்ராவை கொலை செய்த சிவக்குமார் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் தப்பி சென்ற சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சைத்ராவை உடனடியாக தாலுகா மருத்துவமனைக்கும், ஹாசனில் உள்ள எச்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சைத்ரா ஏற்கனவே  உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

கைது
இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீதிமன்றத்தில் நடந்த ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு, கழிவறைக்குச் சென்ற சைத்ராவை சிவக்குமார் பின் தொடர்ந்தார். அங்கு அவரது கணவர் சிவக்குமார் கத்தியால் சைத்ராவின் கழுத்தை அறுத்தார். சைத்ராவை மீட்ட எங்கள் காவல்துறை அதிகாரிகள் அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது, ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதே நேரத்தில் சிவக்குமார் எப்படி நீதிமன்றத்துக்குள் கத்தியை கொண்டு வந்தார், எப்படி திட்டமிட்டார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web