இந்த வங்கியில் வட்டி விகிதம் மாறிடுச்சு! உடனே செக் பண்ணிக்கோங்க!

 
பணம்

வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை கனரா வங்கி மாற்றி அமைத்துள்ளது. இந்தியாவில் லாபம் ஈட்டும் அரசு வங்கிகளில் கனரா வங்கி முக்கிய  பங்கு வகிக்கிறது. கர்நாடக மாநிலத்தின் மங்களூரூவில் அம்மெம்பல் சுப்பா ராவ் பாய் என்பவரால் ‘கனரா ஹிந்து பர்மனெண்ட் ஃபண்டு’ என்கிற பெயரில் 1906ம் ஆண்டு தொடங்கப்பட்டது கனரா வங்கி. 1910ம் ஆண்டு தான் கனரா வங்கி லிமிடெட் ஆக பதிவு செய்து கொண்டு முழு வங்கி சேவையில் ஈடுபடத் தொடங்கியது. சரித்திரப் புகழ் பெற்ற வங்கி தேசிய மயமாக்கள் திட்டத்தின் கீழ் 19 ஜூலை 1961-ல் கனரா வங்கி அரசுடையை ஆக்கப்பட்டது. 1976லேயே 1000 கிளைகளுடன் இந்தியாவில் வியாபாரம் பார்த்த வங்கி. தற்போது 6,300 கிளைகளுடன் கம்பீரமாக லாபம் ஈட்டும் அரசு வங்கிகளில் ஒன்று.

கனரா வங்கி

இந்நிலையில், கனரா வங்கி சேமிப்பு கணக்குகளின் வட்டியை சமீபத்தில் மாற்றியுள்ளது. இந்த புதிய வட்டி மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, புதிய விகிதங்கள் அக்டோபர் 21, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன. மாற்றத்திற்குப் பிறகு, கனரா வங்கி இப்போது சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கு 4 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. வங்கி கணக்கில் சராசரி மாத இருப்பு தொகை (நகர்ப்புறம், நகர்ப்புற மற்றும் மெட்ரோ பகுதிகளில் உள்ள கிளைகளுக்கு ரூ. 1000) மற்றும் ( கிராமப்புறங்களில் உள்ள கிளைகளுக்கு ரூ. 500) ஆகும்.

கனரா வங்கி இப்போது ரூ.50 லட்சத்துக்கு குறைவான நிலுவை தொகை கொண்ட சேமிப்பு கணக்குகளுக்கு 2.90 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 50 லட்சம் முதல் ரூ. 5 கோடி நிலுவை தொகை கொண்ட கணக்குகளுக்கு கனரா வங்கி இப்போதுரூ. 2.95 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதே போல் 5 கோடி முதல் ரூ. 10 கோடி நிலுவை தொகை கொண்ட கணக்குகளுக்கு 3.05 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

பணம்

நிலுவை தொகை ரூ.100 கோடி முதல் ரூ 500 கோடி வரை உள்ள கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி 3.10 சதவீதம் ஆகும். ரூ. 500 கோடி முதல் ரூ 1000 கோடிக்கு குறைவான நிலுவை தொகை கொண்ட கணக்குகளுக்கு வட்டி விகிதம் 3.40 சதவீதம் வழங்கப்படுகிரது. கனரா வங்கி தற்போது அதிகப்பட்சமாக சேமிப்பு கணக்குகளுக்கு 4 சதவீதம் வரை வட்டியை மாற்றியமைத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web