மாணவி ஸ்ரீமதியின் தாய் ஆதாரம் கேட்டு ஆவேசம்! டிஜிபி அலுவலகத்தில் புகார்!

 
ஸ்ரீமதி தாய்

தன்னைப் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்புவதாகவும், எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல், அவதூறான செய்திகளை வெளியிடுவதாகவும் யூ-ட்யூப் சேனல் ஒன்றின் மீது மாணவி ஸ்ரீமதியின் தாயார் டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ளார் . கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 26-ம் தேதி ஜாமீன் வழங்கியது.

ஸ்ரீமதி

பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தங்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களின் அடிப்படையில் மாணவியின் தாய் செல்வி அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், தி கே டிவி எனும் பெயரில் யூ-ட்யூப் சேனல் நடத்தி வரும் கார்த்திக் பிள்ளை என்பவர், தனது யூ-ட்யூப் சேனலில் தனது மகள் குறித்தும், தன்னை பற்றியும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டிய ஸ்ரீமதியின் தாயார் செல்வி, தனது கணவருடன் டி.ஜி.பி அலுவலகம் வந்து புகார் தெரிவித்தார்.

அதன்பின் ஸ்ரீமதியின் தாய் செல்வி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஸ்ரீமதி கடந்த 12-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார். எங்களுக்கு 13-ம் தேதி அதிகாலை தான் தெரிவித்தனர். இது திட்டமிட்ட கொலை. மர்மமான முறையில் உள்ளது. இந்த கொலைக்கு எங்களிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளது. 

ஸ்ரீமதி

இந்த கொலையை மறைக்க, எங்களுக்கு எதிராக பள்ளி நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனல் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், உண்மைகளை மறைக்கும் வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றது. தற்போது அவர்கள், என்னை பற்றி இழிவாக வதந்திகளை பரப்புகிறார்கள்.

ஏற்கெனவே மகள் இறந்த துக்கத்தில் இருக்கிறோம். இந்த பதிவு எங்களுக்கு மிகுந்த மன உளைச்சளை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கைது செய்ய கோரி டிஜிபி அவர்களிடம் மனு கொடுக்க வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web