தொடருது மர்மம்.. சசிகலா மருமகள் தற்கொலை முயற்சி!

 
விவேக் சசிகலா

இரட்டை இலையைக் கைப்பற்ற இன்னமும் முயற்சித்து கொண்டிருக்கிறார் சசிகலா. ஆனால், அவரது குடும்பத்து உறுப்பினர்களால் தொடரும் பஞ்சாயத்துக்களில் இருந்து அத்தனை எளிதில் அவரால் வெளிவர முடியவில்லை என்கிறார்கள். டிடிவி தனிக்கட்சி ஆரம்பித்தது ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவுக்கு உடன்பாடில்லை என்றும், வேறு வழியில்லாமல் தான் சாதித்து, இரட்டை இலையை தேர்தலுக்குள் கைப்பற்றுவேன் என்கிற டிடிவியின் கணக்குகள் தவிடு பொடியானதிலேயே சசிகலா அப்செட்.

தற்போது, சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் மனைவி கீர்த்தனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள். ஜாஸ் சினிமா உட்பட பல நிறுவனங்களை நடத்தி வரும் விவேக்கும், கீர்த்தனாவுக்கும் திருமணம் நடைபெற்ற போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா விவேக் திருமணத்துக்கு செல்லவில்லை. விவேக் தன்னுடைய மனைவி கீர்த்தனாவுடன் எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார்.

கீர்த்தனா

28 வயதான கீர்த்தனாவுக்கும் விவேக்குக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாகவும், அதனால், தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் தொடர்ந்த வண்ணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், மாமியார் இளவரசி மற்றும் சசிகலாவிடம் இந்த பிரச்சனையை கீர்த்தனா கொண்டு சென்றதாகவும், அவர்கள் இருவருமே விவேக்கை அனுசரித்து செல்ல வேண்டும் என கீர்த்தனாவுக்கு அறிவுரை கூறியதால் கீர்த்தனா அப்செட் என்கிறார்கள். இந்நிலையில் விவேக்கிற்கும் கீர்த்தனாவுக்கும் இடையே வழக்கமான சண்டை தொடங்கி வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை தீவிரமானது.

சசிகலா

ஒரு கட்டத்தில் கீர்த்தனா வீட்டில் இருந்த, தேவையில்லாத மாத்திரைகளை அதிகளவில் விழுங்கி விட்டார். பேசிக்கொண்டே இருந்த கீர்த்தனா தானாக  சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்தார். அதிர்ந்து போன விவேக் உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனையில் கீர்த்தனாவை சேர்த்தார். அங்கு கீர்த்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மருத்துவர்கள் பரிந்துரையின்படி,

அடையாறில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கீர்த்தனா ஆபத்தான நிலையில்  அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விவேக்கிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சசிகலா குடும்பத்தில் நடந்த இந்த சம்பவம், அதிமுக, அமமுக வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக அமைந்து விட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web