அடுத்த அதிர்ச்சி! வேகமெடுக்குது ஜப்பானிய மூளைக்காய்ச்சல்! 23 பேர் பலி! கதறுது அசாம் மாநிலம்!

 
டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், விதவிதமான நோய்களால் பல நாடுகள் சிக்கி, செய்வது அறியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன. தக்காளி காய்ச்சல், மூளைக்காய்ச்சல், நத்தைகளால் ஆபத்து, தேனீக்களால் ஆபத்து என ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமான பிரச்சனைகள். இந்நிலையில், தற்போது  அசாம் மாநிலத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

ஜப்பானிய மூளை காய்ச்சல் எனப்படும் வைரஸ் தொற்று, அங்கு பெருகி வருகிறது. இத்தொற்று மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு எளிதில் பரவக்கூடிய தன்மை கொண்டதாகும்.

மூளை
இந்நோய்க்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சியான செய்தி தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த செய்தியை தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் மோரிகாவன் மற்றும் நல்பாரி ஆகிய மழை வெள்ளம் சூழ்ந்த 2 மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

காய்ச்சல்

மேலும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு 16 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அசாம் மாநிலத்தில் இந்த ஜப்பானிய மூளைக்காய்ச்சல் இதுவரை 160 பேருக்கு இதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அசாம் மாநிலத்தில் தற்போது அடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தின் இடர்பாடுகளால் மக்கள் அவதியுற்று வரும் வேளையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அரசு விரைவில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web