நடு வானில் வெடித்து சிதறிய விமானம்!! பயணிகள் அனைவரும் பலி!!!

 
விமானம்

11.5 டன் வெடி பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் திடீரென்று விபத்துக்குளாகி வெடித்து சிதறிய சம்பவம் கிரீஸ் நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.நேற்று முன்தினம் இரவு செர்பியாவில் இருந்து உக்ரைன் நாட்டின் ஆன்&2 மெரிடியன் சரக்கு விமானம் வங்கதேசம் நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானம் கிரீஸ் நாட்டின் கவாலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் 2 கிராமங்களுக்கு நடுவே பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விமானத்தில் என்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளது.

வெடித்த  விமானம்

இதனை கவனித்த விமானி, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும் அடுத்த சில நிமிடங்களில் விமானம் தீப்பிடித்து தரையில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியே கரும்புகையால் சூழப்பட்டது. 

கீழே விழுந்து விமானம் 2 மணி நேரத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. விமான விபத்து குறித்து செர்பியன் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, ‘‘விபத்துக்குள்ளான விமானத்தில் 11.5 டன் எடை கொண்ட வெடி மருந்துகள் அனுப்பப்பட்டு இருந்தது. மேலும் விமானத்தில் பயணித்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 8 பேரும் பலியாகி உள்ளனர்’’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளது.

வெடித்த விமானம்

விபத்தின் போது பயங்கர வெடிசத்தம் கேட்டதாக அங்கு வசிக்கும் பொது மக்கள் கூறியுள்ளனர். எனவே விபத்து நடந்த பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபத்தான ரசாயனங்கள் விபத்து பகுதியில் இன்னும் ஏதேனும் எஞ்சி இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வெடிவிபத்தால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து மக்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி இருப்பதால், அனைவரும் வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடிவைக்கவும், மாஸ்க் அணியவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. தொடர்ந்து சம்பவ இடத்தில் மீட்புப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web