போலீசே செல்போன் திருடி விற்ற அவலம்!! சிபிசிஐ அதிரடி நடவடிக்கை!!

 
ராமநாதபுரம்


தற்கொலை செய்து கொண்ட சக  போலீஸ்காரரின் செல்போனை திருடிய 2 போலீசார் அதனை விற்றனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் பணியிடை நீக்கப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் அசோக்குமார் என்ற போலீஸ் அதிகாரி பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அசோக்குமார். தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு தற்போதுவரை விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீஸ் 

இது குறித்து மேற்கொண்ட விசாரணைக்காக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசாரை தொடர்பு கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்களை கேட்டனர். அதில் அசோக்குமாரின் செல்போன் மட்டும் காணாமல் போயிருந்தது.

இதுதொடர்பாக ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அசோக்குமாரின் செல்போனை ஒருவர் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், ஒரு கடையில் அந்த போனை வாங்கியதாக தெரிவித்தார். பின்னர் அந்த நபர் குறிப்பிட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தியதில், ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்திலிருந்து 2 போலீசார் ரூ.2 அசோக்குமாரின் செல்போனை விற்றது தெரிந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

பணியிடை நீக்கம்

இறுதியில் கேணிக்கரை காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் சுரேஷ் மற்றும் ஏட்டு கமலக்கண்ணன் ஆகிய 2 பேரும் அசோக்குமாரின் போனை திருடி விற்றது உறுதி செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் எஸ்.பி.உத்தரவின் பேரில் இருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.வழக்கு விசாரணைக்காக வைக்கப்பட்ட ஆவணங்களை போலீசார் அதிகார துஷ்பிரயோகத்தால் விற்பனை செய்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web