தங்கத்தின் விலை அதிரடி சரிவு!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
தங்கம்

சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தினை பொறுத்து சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில்  ஜூலையில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை  மத்திய  அரசு உயர்த்தியது. இதனையடுத்து தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. கடந்த சில வாரங்களாக நகை விலை குறைந்தாலும்  அடுத்த  நாளே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலை அதிகரித்தது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தங்கம்

இந்நிலையில், இம்மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 குறைந்தது. அதன்படி  ஒரு சவரன்  ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,360க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்த சமயத்தில்  தங்க நகை வாங்க நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.  ஆனால், ஆகஸ்ட்  12ம் தேதி வழக்கத்திற்கு மாறாக தங்கத்தின்  விலை திடீரென  சவரனுக்கு  ரூ.40 உயர்ந்தது. 
நேற்றும் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளிலேயே சரிவை சந்தித்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6 குறைந்து, ரூ.4,849க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்
தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை சற்றே குறைந்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து, ஒரு கிராமுக்கு ரூ.63.30க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ63300க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2 வது நாளாக தங்கத்தின் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில்  பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web