உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!! பெரும் அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

 
தங்கம் நகைக்கடை

சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகில் என்னதான் புதிய புதிய ஆபரணங்கள் கண்டறியப்பட்டாலும்  தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகமும்  என்றும் குறையப்போவது இல்லை. உலகளாவிய  பொருளாதாரத்திலும் தங்கம்  பெரும்பங்கு வகுக்கிறது. தங்கத்தின் மீதான ஈடுபாடும் விருப்பமும் குறையவில்லை. பணவீக்கம் உயர்விற்கு மிக முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவு முதலீடு செய்வதாக உலக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 

தங்கம்
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256க்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 38 ரூபாய் உயர்ந்து, ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து  ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தங்கம்
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3,905க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது . இன்றைய விலை உயர்வின் படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 31 ரூபாய் உயர்ந்து, ரூ.3,936க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,100 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ62.30. ஒரு கிலோ வெள்ளியின் விலை  ரூ.62,300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web