ஆபரண தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கத்தை நெனைச்சே பார்க்க முடியாது போல..

 
தங்கம்

நடுத்தர குடும்பத்தினர் இனி தங்கம் வாங்குவதை நினைத்தேப் பார்க்க முடியாத அளவுக்கு கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய கால நேர நிலவரப்படி ஆபரண தங்கம் சவரனுக்கு 424 ரூபாய் உயர்ந்து நகைப் ப்ரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை விரைவில் கிராமுக்கு ரூ.5000யைத் தொட்டு விடும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். 

அமெரிக்காவின் மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க திட்டமிடுகின்றன. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். அதோடு இந்தியாவிலும் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவும் தேவையினை குறைக்கலாம். ஆக இதுவும் அழுத்தத்தினை கொடுத்துள்ளது. 

தங்கம்

இதற்கிடையில் தான் தங்கம் இடிஎஃப்களில் இருந்தும் முதலீடுகள் வெளியேற ஆரம்பித்துள்ளன. இதற்கிடையில் அமெரிக்க வங்கியானது வட்டி விகிதத்தினையும் அதிகரித்துள்ள நிலையில், இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்கிறது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 53 ரூபாய் உயர்ந்து, ரூ.4,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 424 ரூபாய் உயர்ந்து, ரூ.38,160-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,864-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 43 ரூபாய் உயர்ந்து, ரூ.3,907-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,900 ரூபாய் உயர்ந்து, ரூ.66,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web