தொடருது மழைக்காலம்! ஆபத்து காலத்துல இந்த விஷயங்களை கவனமாக கடைப்பிடிங்க..பாதுகாப்பாக இருங்க!

 
அச்சச்சோ…! இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், தண்ணீரில் குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்கள். மழைக் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் கடைப்பிடியுங்கள். பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், விழிப்புணர்வுடனும் இருங்க. மொட்டைமாடியில துணி காய போட முடியலைன்னு கண்ட இடத்துல இரும்பு கம்பியில கொடியைக் கட்டி, ஈரமான துணிகளை உலர்த்தாதீங்க.

வீட்டின் சுவற்றில் ஈர கசிவு இருக்கலாம். அதனால ரொம்ப எச்சரிக்கையாக இருங்க. அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதி கனமழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதெல்லாம் ச்ச்சும்மா... ட்ரெய்லர் தான்.. இன்னும் நிறைய மழை இருக்குன்னு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் சொல்லி இருக்கிறார். அதனால, வீர சாகசம் செய்யறேன்னு இந்த மழையிலே தேவையில்லாம வெளியே கிளம்பாதீங்க. 

இன்று இந்த மாவட்டங்களில் கனமழை!! மக்களே உஷார்!!

 • முன்னெச்சரிக்கை நடவடிக்கையா உங்களோட செல்போன்ல சார்ஜ் போட்டுடுங்க. வீட்டுல தீப்பெட்டி, மெழுகுவர்த்தி எல்லாம் பத்திரமான, கைக்கு எட்டும் தூரத்துல வெச்சுக்கோங்க.
 • எங்க வீட்ல இன்வெர்ட்டர் இருக்குன்னு பந்தா பண்ணாம, இன்வெர்ட்டரைத் தேவைக்கு பயன்படுத்துங்க. புறா கூண்டு போல ப்ளாட்லேயும், அபார்ட்மெண்ட்களிலும் வாழ்றவங்களோட எண்ணிக்கை அதிகம். வீட்ல இன்வெர்ட்டர் இருந்தாலும், மோட்டர் போட்டு, தண்ணீரை டேங்கல ஏற்றுவதற்கு மின்சாரம் வேண்டும். அதனால, தேவையான தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொள்ளுங்க. நிறைய ஈரத்துல கால் வைக்காதீங்க.
 • மழைக் காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க 20 நொடிகள் சோப்பு போட்டு கைகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். 
 • 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரை பருக வேண்டும்.
 • உணவினை சூடான நிலையிலேயே சாப்பிட வேண்டும்.
 • பழைய உணவுகளை சில்லுன்னு ஆறிப் போகிற வரைக்கும் மொபைலை நோண்டிக்கிட்டு இருக்காக, முடிந்த வரை சூடாக சாப்பிட்டு பழகுங்க. 

கனமழை காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

 
 • வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
 • காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே ஆரம்ப சுகாதார நிலையங்களில் முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். அருகில் இருக்கும் மெடிக்கல் கடைகளில் நீங்களாகவே உங்களுக்கு வைத்தியம் பார்க்காதீங்க. 
 • வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு சர்க்கரை கரைசல் குடிக்க வேண்டும்.
 • மொத்தத்துல ரொம்ப பாதுகாப்பாக இருங்க.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web