பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் வெளியீட்டுத் தேதி… ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு…

 
பொன்னியின் செல்வன்

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்' கதை  அதே பெயரில் இரு பாகங்களைக் கொண்ட திரைப்படமாகத்  இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இந்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி, முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் திரை பிரபலங்கள் நடித்து இருந்தனர்.

பொன்னியின் செல்வன்

வசூல் ரீதியாகவும், விமா்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்த இப்படம் இதுவரை ரூ.450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து  வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது 'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்திற்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பால், இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் உள்ளது.   

பொன்னியின் செல்வன்

 

இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி 2 ஆம் பாகத்துக்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்திலேயே பெரும் லாபத்தை கண்ட இத்திரைப்படம் 2 ஆம் பாகத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்த தயாராகி வருகிறது.

From around the web