மரபணு மாற்றப்பட்ட கடுகின் ஆபத்து காரணிகள்.. உச்சநீதிமன்றம் கவலை !

 
kaduku

மரபணு மாற்றப்பட்ட கடுகின் ஆபத்து காரணிகள் கவலையளிக்கின்றன என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது.

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.ஹெச்-11 என்ற கடுகு பயிரை வணிக உற்பத்திக்காக களப் பரிசோதனை செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அண்மையில் அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், மறு உத்தரவு வரும் வரை, மரபணு மாற்றப்பட்ட கடுகை எவ்வித விதைப்பும் செய்யக் கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், உச்சநீதிமன்றத் தடையையும் மீறி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரிடப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன.

kaduku

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, பி.வி.நாகரத்னா ஆகியோர்  அடங்கிய அமா்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, உரிய அனைத்து காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட்டும். ஆய்வு செய்யப்பட்ட பிறகே மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.ஹெச்-11 கடுகு வகைக்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கான நிபந்தனை ஒப்புதல் அளிக்கப்பட்டது, என வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், மரபணு மாற்றப்பட்ட கடுகின் ஆபத்து காரணிகள் மிகுந்த கவலையுறச் செய்கின்றன என்று குறிப்பிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

From around the web