புற்றுநோய் பரவும் அபாயம்! 38,000 வழக்குகள்! பேபி பவுடர் தயாரிப்பை நிறுத்துகிறது ஜான்சன் நிறுவனம்!

 
ஜான்சன் அண்ட் ஜான்சன்

புற்றுநோயைப் பரப்பும் அபாயம் இருப்பதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் குழந்தைகளுக்கான பவுடர் மீது பல வருடங்களாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு முதல் குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பை நிறுத்துவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கான பொருட்கள் உற்பத்தியில் முண்ணனியில் இருந்து வரும் நிறுவனங்களில் குறிப்பிடத்தகுந்தது  ஜான்சன் அண்ட் ஜான்சன், இந்நிறுவனம் 2023 தனது உற்பத்தியை நிறுத்த  திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே பல்வேறு விதமான சட்டச் சிக்கல்களால்  2  ஆண்டுகளாக  அமெரிக்காவில் விற்பனைக்கு வரவில்லை. தற்போது உலக அளவில் பேபி பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன்
பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடர்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதாக சுமார் 38,000 பேர் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மீதான புகார்களை தொடர்ந்து தேவை குறைந்து வருவதால், 2020ல் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விற்பனையை நிறுத்தியது.

ஜான்சன் அண்ட் ஜான்சன்

அத்துடன்  தயாரிப்புகளை உலகளாவிய அளவில் நிறுத்துவதாக அறிவித்தத். அதே நேரத்தில் நிறுவனத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தது.‘பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அறிவியல் சோதனைகள் டால்கம் பாதுகாப்பானது மற்றும் ரசாயனம் கலப்படம் இல்லாதது என்பதை நிரூபித்துள்ளது’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990  முதல் இன்று வரை குழந்தைகள் டால்கம் பவுடர் என்றால்  உடனடியாக  நினைவுக்கு வருவது ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் தான் என்பது குறிப்பிடத்தக்கது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web