மணல் கடத்தல் கும்பலின் மண்டை உடைப்பு!! பகீர் பிண்ணனி!!

 
அஜீத் அரசு

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அஜித் (25) மற்றும் அரசு (26). இவர்கள் இருவரும் சில தினங்களுக்கு முன்பு அம்பலூர் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கஸ்தூரியிடம் மாதத்திற்கு ரூ. 10 ஆயிரம் கொடுத்து விட்டு அப்பகுதியில் உள்ள பாலாற்றில் மணல் கடத்தி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.இந்நிலையில், மணல் வியாபாரம் துவங்கிய 10 நாட்களில் இவர்களுக்கு சொந்தமான மணல் கடத்தல் வாகனத்தை, கிராம நிர்வாகத்தினர் சிறை பிடித்து ரூ. 50 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டதாக தெரிகிறது. இதில் உடன்படாத மணல் கடத்தல்காரர்கள் இறுதியாக ரூ. 25 ஆயிரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு முதல் தவனையாக ரூ. 10 ஆயிரத்தை கொடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

இதை பெற்றுக் கொண்ட கிராம அலுவலரின் உதவியாளர் கஸ்தூரி, மீதமுள்ள ரூ.15 ஆயிரத்திற்கு மணல் கடத்தல்காரர்களின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டுள்ளார். இதனால் கோபமடைந்த மணல் கடத்தல்காரர்கள், மேலும் ரூ.15 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துவிட்டு செல்போனை மீட்டு வந்துள்ளனர். அந்த சமயத்தில், பணம் கொடுத்ததை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இதனை அறிந்த கஸ்தூரி மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரை இரு சக்கர வாகனத்தில் அமரவைத்து பணத்தை பெற வைத்து சிறிது தூரம் சென்றதும் பணத்தை அவரிடம் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கஸ்தூரி பெற்றுக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கஸ்தூரியின் மகன்கள் இருவர், மணல் கடத்தல்காரர்களை புத்துகோவில் பகுதியில் நேற்று இரவு நேரில் சந்தித்தனர்.அப்போது கஸ்தூரி லஞ்சம் வாங்கிய வீடியோ குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் 4 பேருக்கும் வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் கஸ்தூரியின் மகன்கள் இருவரும் மணல் கடத்தல்காரர்களான அரசு மற்றும் அஜித்தை அடித்து உதைத்து மண்டையை உடைத்துள்ளனர். 

மணல் திருட்டு

இதனால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதே போல் மணல் கடத்தல்காரர்கள் தாக்கியதில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளரின் மகன்கள் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். தகவல் அறிந்த அம்பலூர் போலீசார் இருதரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் மணல் கடத்தலை சேர்ந்த நபரிடம் பணம் பெற்றுக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web