தொடரும் சோகம்!! ஓடும் ரயில் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை!!

 
மோனிஷ்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் வசிப்பவர் 48 வயது கோதண்டபாணி (48), உயர்நீதிமன்றத்தில் கிளார்க்காக  பணியாற்றி வருகிறார். இவது மகன் மோனிஷ் (17). இவர் திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் 3ம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் நவம்பர் 11ம் தேதி இவர் கல்லூரியின் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதற்காக கல்லூரி நிர்வாகம் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்துள்ளது. பின்னர், பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸ்

இந்நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்ற கோதண்டபாணி, தன் மகன் மோனிஷிடம் செல்போனை கல்லூரிக்கு ஏன் எடுத்து சென்றாய் என கண்டித்துள்ளார். இதனால், மன உளைச்சல் அடைந்த மோனிஷ் நேற்று தேர்வு எழுத சென்றுள்ளார். அப்போது, கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத மோனிஷை அனுமதிக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், பேராசிரியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், அவர்களிடம், நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் எனக் கூறிவிட்டு, ஆவடி ரயில் நிலையம் சென்றுள்ளார். உடனே, கல்லூரி நிர்வாகம், மாணவன் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் நேற்று மதியம் திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி  சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ்  முன்பு மோனிஷ் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

ரயில் தண்டவாளம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி ரயில்வே போலீசார், மோனிஷின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web