கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி!! பரபரப்பு வாக்குமூலம்!!

 
ஆறுமுகம், தீபா

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம் . இவரது மனைவி தீபா . இந்த தம்பதிக்கு 17 வயதில் புஷ்பநாதன் என்ற மகனும்,  15 வயதில் கலைவாணி என்ற மகளும் உள்ளனர். ஆறுமுகம் 13 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் 8 மாதம் முன்பு  தனது சொந்த ஊருக்கு திரும்பினார். 
ஆறுமுகம்  திடீரென நவம்பர் 7ம் தேதி உயிரிழந்து விட்டதாக அவரது மனைவி கூறினார்.  அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆறுமுகம் உறவினர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தீபா

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆறுமுகம் உடலை கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனை முடிவில் ஆறுமுகம்  கழுத்து நெரித்து கொலை செய்ததாக  தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த ஆறுமுகம் தீபா  மீது சந்தேகப்பட்டு அடிக்கடி குடும்பத்தில் சண்டை , சச்சரவுகள் அதிகரித்தன. வாக்குவாதம் முற்றி  ஆறுமுகம் அவ்வப்போது குடித்துவிட்டு மனைவி தீபா மற்றும் பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

rip

இதனால் ஆத்திரமடைந்த தீபா தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். நவம்பர் 6ம் தேதி வழக்கம் போல் குடித்துவிட்டு ஆறுமுகம் வீட்டிற்கு வந்து தூங்கிவிட்டார். தீபா மற்றும் அவரது மகன் புஷ்பநாதன், மகள் கலைவாணி 3 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், உறவினர்களிடம்  ஆறுமுகம் இயற்கையாக மரணம் அடைந்தார் என நாடகமாடியதை  காவல்துறையின் விசாரணையில் ஒப்புக்கொண்டனர். அதன்பிறகு  தீபா மற்றும் அவரது பிள்ளைகள் புஷ்பநாதன், கலைவாணி  3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web