நடு வானில் விமானத்தில் இருந்து குதிக்க முயன்ற பெண்… அவர் சொன்ன காரணம்… அதிர்ந்துபோன நீதிமன்றம்…

 
விமானம்

அமெரிக்கா - டெக்சாசில் இருந்து கொலம்பஸுக்கு சென்றுக் கொண்டிருந்த 'Southwest Flight 192' என்ற விமானத்தில் பல்வேறு பயணிகள் பயணித்தனர். அப்போது விமானம் சுமார் 37,000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் விமானத்தின் இருக்கையில் அமர்ந்திருந்த 34 வயதுடைய எலோம் அக்பெக்னினோ என்ற பெண் ஒருவர் திடீரென எழுந்து விமான ஊழியரை தள்ளிவிட்டு பக்கவாட்டு கதவைத் திறக்க முயன்றார். இதனை கண்ட சக பயணிகள் உடனே அந்த பெண்ணை இறுக்கி பிடித்து தடுத்தனர்.

விமானம்

இருப்பினும் அந்த பெண்   விமான கதவை திறக்க முயன்றதால், ஆர்கன்சாஸில் உள்ள பில் & ஹிலாரி க்ளின்டன் தேசிய விமான நிலையத்தில் சவுத்வெஸ்ட் விமானம் அவசரமாக தரையிறக்கியிரகப்பட்டது. அங்கு வைத்து நடுவானில் சலசலப்பை ஏற்படுத்திய பெண் பயணியை போலீசார் கைது செய்தனர்.  ஆர்கன்சாஸின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து  விசாரிக்கப்பட்டது.

விமானம்

அப்போது, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில், பறக்கும் விமானத்தின் கதவைத் திறக்க முயற்சிக்கும் போது எலோம் அக்பெக்னினோ "ஜீசஸ் என்னை ஓஹியோவுக்குப் பறக்கச் சொன்னார், ஜீசஸ் விமானத்தின் கதவைத் திறக்கச் சொன்னார்" என்பதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு, தனது தலையை இடித்துக் கொண்டிருந்தார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட எலோமிடம் விசாரித்ததில், அவர் ஒரு போதகரைச் சந்திக்க மேரிலாந்திற்குச் செல்வதாக அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார் என்றும் அவரிடம் எந்த லக்கேஜும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எலோமின் இந்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

From around the web