‘இந்து’ என்ற வார்த்தைக்கு ரொம்ப அசிங்கமான அர்த்தங்கள் உண்டு.. தெரிஞ்சா வெட்கப்படுவீங்க! புயலைக் கிளப்பிய காங்கிரஸ் தலைவர்!

 
ஜார்கி

‘இந்து’ என்கிற வார்த்தை எங்கிருந்து வந்தது? ‘இந்து’ என்ற வார்த்தைக்கு திருடன், அடிமை என கொச்சையான அர்த்தங்கள் உள்ளது என்று பேசி தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜார்கிஹோலி.

கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரான ஜார்கிஹோலி முந்தைய முந்தைய காங்கிரஸ் அரசில் வனத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். மூத்த தலைவரான ஜார்கி, இப்படி பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


"இந்து" என்ற வார்த்தைக்கு மிக அசிங்கமான அர்த்தம் இருப்பதாகவும், இந்து என்கிற வார்த்தையின் தோற்றம் இந்தியாவில் இல்லை என்றும் பெலகாவி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ஜார்கி இப்படி பேசியிருக்கிறார். 

மேலும் "இந்து என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? அது நம்முடையதா? அது பாரசீகம், ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் பகுதியைச் சேர்ந்தது. இந்து என்ற வார்த்தைக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? பிறகு எப்படி ஏற்றுக் கொள்வது?" என்றார்.

ஜார்கி

காங்கிரஸ் தலைவர் ஜார்கி பேசிய இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆளும் பாஜக இது இந்துக்களை அவமதிப்பதாகவும் ஆத்திரமூட்டுவதாகவும் உள்ளது என்று வன்மையாக தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. 

"இந்து என்ற வார்த்தையின் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டால் நீங்கள் வெட்கப்படுவீர்கள். அது அத்தனை ஆபாசமான, அசிங்கமான வார்த்தை" என்று அவர் வீடியோவில் பேசுகிறார்.  இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது என்பதை அறிய பார்வையாளர்களை விக்கிபீடியாவை சரி பார்த்துக் கொள்ளுங்கள்" என்கிறார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web