பர்தா அணிந்து சுற்றிதிரிந்த இளைஞர்.. காரணம்கேட்டு ஆத்திரம் அடைந்த போலீசார் !!

 
கப

நாடு முழுவதும் அண்மைக்காலமாக மதம் தொடர்பான விவகாரங்கள் சர்ச்சையாகி வருகிறது. சிலர்  அரசியல் நடவடிக்கையாகவும் இதனை மாற்றுகின்றனர். கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் பர்தா அணிந்துசெல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் புயலை கிளப்பியது. பின்னர் இரு தரப்பினரும்  நீதிமன்றம் சென்றுள்ளனர்.

இப்படி மிகவும் சென்ஷெட்டியூவான இந்த விவகாரத்தில் கன்னியாகுமரியில் இளைஞர் ஒருவரின் செயல் போலீசாருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் அருகே பர்தா அணிந்த நிலையில் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். ஆனால் அவரது நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததால், இதனை கல்லூரி காவலாளிகள் பார்த்துள்ளனர். 

னக

நீண்டநேரம் அப்பகுதியில் பர்தாவை அணிந்துகொண்டு சுற்றித்திரிந்ததால் ஒருகட்டத்தில் அந்த நபரை பிடித்த திட்டம்போட்டனர். பின்னர் அவரை பிடித்து பர்தாவை விலக்கி பார்த்தபோது, இளைஞர் ஒருவர் பெண் வேடத்தில் பர்தா அணிந்து இருந்தது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், கேரளாவை சேர்ந்த அந்த இளைஞர் தனது காதலியை நேரில் பார்த்து பேச பர்தா அணிந்து வந்தது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து இளைஞரை எச்சரித்து போலீசார் அனுப்பிவைத்தனர்.   

From around the web