கரூர் அருகே பரபரப்பு.. வீச்சருவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்…

 
மிரட்டல்

தமிழக காவல்துறை எவ்வளவு கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டாலும், தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆங்காங்கே குற்றகள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றது. கரூர் அருகே டாஸ்மாக் பாரில் ஒருவர் வீச்சருவாளுடன் அங்கிருந்த ஊழியர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

குடும்பத் தகராறில் 6 பேருக்கு அரிவாள் வெட்டு!

கரூர் அடுத்த ஆத்தூரில் டாஸ்மாக் மதுபான கடையும், அதை ஒட்டி  பாரும் செயல்பட்டு வருகிறது. நேற்று அந்த பாருக்கு சென்ற இளைஞர்கள் 3 பேர், பாரில் வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே நீண்ட வாளை எடுத்து வந்து அதில் ஒரு இளைஞர் அவரை தாக்க முற்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த மற்ற ஊழியர்கள் அதனை தட்டிக் கேட்டுள்ளனர். ஆனால் அந்த இளைஞர்   அவர்களை தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி   வருகிறது.

போலீஸ்

மேலும் இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் அருகே டாஸ்மாக் பாரில் மர்ம நபர் வீச்சருவாளுடன்   ஊழியர்களை பணம் கேட்டு மிரட்டி,  தாக்கிய சம்பவம் அதிர வைத்துள்ளது.
From around the web