அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது! தமிழக அரசு அறிவிப்பு!

 
தமிழக அரசு

தமிழகத்தில் நாளை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது. அதே போல், அனைத்து பள்ளி, கல்லூரிகளும், அரசு அலுவலகங்களும் நாளைய தினம் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த மாதம் தீபாவளி பண்டிகை 24ம் தேதி கொண்டாடப்பட்டது. பெரும்பாலான மக்கள், தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தொடர் விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி, சொந்த ஊர்களுக்குச் சென்றனர். சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர், தீபாவளி திங்கட்கிழமையன்று வந்த நிலையில், அதற்கடுத்த தினமான செவ்வாய்க்கிழமை வேலை நாளாக அமைந்ததால், செவ்வாய்க்கிழமையும் விடுமுறை தினமாக இருந்தால், சொந்த பந்தங்களோடு பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, அவரவர் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்ப வசதியாக இருக்கும் என்று அரசுக்கு பொதுமக்களிடமிருந்து எதிர்பார்ப்பும் கோரிக்கைகளும் வந்த வண்ணம் இருந்தன. 

பள்ளிகள்

வெளியூருக்குச் சென்றிருந்த மாணவர்களும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்படக் கூடும் என்று விடுமுறைக்கான எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்தது. இந்நிலையில், தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று விடுமுறை அறிவித்தது.

பள்ளி வாகனம்

அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதத்தில், நவம்பர் 19ம் தேதி வேலை நாளாக அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளும், அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் இயங்கும் என்றும், சனிக்கிழமையான நாளை முழு வேலை நாள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web