மருமகளை வீட்டுவேலை வாங்குவதில் தப்பே கிடையாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 
திருமணம்

தன்னை வீட்டு வேலைகளைச் செய்ய சொல்லி கணவர் வீட்டார் வற்புறுத்துகிறார்கள் என்று கோர்ட் படியேறிய மருமகள் அதிர்ச்சியடையும் விதத்தில், திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளை வீட்டு வேலைகளைச் செய்ய சொல்வதில் தவறு கிடையாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பில், கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாக, திருமணத்திற்கு முன்பாகவே, தனக்கு வீட்டு வேலைகளைச் செய்வதில் ஆர்வமில்லை என்று மணமகள் கூறவில்லை என்பதை நீதிமன்றம் கோடிட்டு காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசையாசையாய் திருமணம் முடிந்ததும், பல கனவுகளோடு புகுந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் மணப்பெண்ணை, அதன் பின்னர், புகுந்த வீட்டிலுள்ள கணவரின் மாமியார், அக்கா, தங்கைகள் என கணவர் உட்பட கணவர் குடும்பத்தினர் வீட்டு வேலைகளைச் செய்ய சொல்வது குற்றமாகாது என கூறி உயர்நீதிமன்ற கிளை அதிர வைத்துள்ளது.

மும்பையில் திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் மீது உயர்நீதிமன்ற அவுரங்காபாத் கிளையில் விசித்திர வழக்கு ஒன்று தொடுத்து இருந்தார். அதில், திருமணமான ஒரு மாதத்தில் கணவரும், அவரது குடும்பத்தினர் தன்னை வீட்டு வேலைக்காரி போல நடத்துவதாகவும். புதிதாக கார் வாங்க வேண்டும் என்று கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.4 லட்சம் கேட்டு துன்புறுத்துவதாகவும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் விபா கன்கான்வாடி, ராஜேஷ் பாட்டீல் ஆகியோர் விசாரித்தனர்.

உயர்நீதிமன்றம் 10 நாட்கள் விடுமுறை!!

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் கூறும் போது, ‘‘திருமணமான பெண்ணை தன் வீட்டு வேலை செய்ய சொல்வது கொடுமைப்படுத்துவது ஆகாது. அப்படியும் பெண்ணுக்கு வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லை என்றால் அதை திருமணத்திற்கு முன்பாகவே மாப்பிள்ளை வீட்டாரிடம் கூறி இருக்க வேண்டும். அப்படி கூறி இருந்தால் அவர்கள் அந்த பெண்ணை திருமணம் செய்வது குறித்து யோசித்து முடிவு செய்திருப்பார்கள்.

திருமணம்

தன்னுடைய வீட்டு வேலையை செய்ய சொல்வது கொடுமைப்படுத்துவது ஆகாது. மேலும் ரூ.4 லட்சம் கேட்டு துன்புறுத்தியதாக மட்டுமே கூறியிருக்கிறார். எப்படி துன்புறுத்தினார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. எனவே இது குடும்ப வன்முறை சட்டப்பிரிவில் வராது’’ என்று கூறினார்கள்.

அதன் பின்னர் மனுதாக்கல் செய்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை இந்த வழக்கில் இருந்து விடுவிடுத்து வழக்கை ரத்து செய்ய கோரி உத்தரவு பிறப்பித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web