திருடர்களை கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி! பொது மக்களின் தரமான சம்பவம்!

 
திருடன்

கொஞ்சம் கொஞ்சமாக 100 கிலோ வரையிலான இரும்புகளை, கூடாரம் அமைக்க வைக்கப்பட்டிருந்த இரும்புக் துண்களில் இருந்து சிறிது சிறிதாக கொள்ளையடித்துச் சென்ற 2 கொள்ளையர்களை ஊர் மக்கள் கையும், களவுமாக பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் முசாபர்பூர் நகரில் பாலம் ஒன்று அமைந்துள்ளது. அதன் அருகே பல இரும்பு கூடாரங்களை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் பெரிய அளவிலான இரும்பு துண்டுகள் கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

திருடன்
இந்நிலையில் கொஞ்சம், கொஞ்சமாக மொத்தம் 100 கிலோ வரையிலான இரும்புத் துண்டுகள் ஒரு வாரத்தில் மாயமானது. இதனால் பொது மக்கள் திருடர்களை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி திருட்டில் ஈடுபட்ட 2 பேரை அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் ஒன்று கண்காணித்து துரத்தியது. இதில் உஷாரான திருடர்கள், ஊர்மக்களிடம் இருந்து தப்பித்து ஓடியது.

இளம் நடிகர் கைது

அவர்களை விடாமல் பிடித்த ஊர்மக்கள் திருடர்களை பிடித்து அங்கிருந்த கம்பம் ஒன்றில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளது. இதில் திருடர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் திருடர்களை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திருடர்கள்  2 பேரும் முசாபர்பூர் நகரை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web