மீண்டும் பரபரப்பு!! 2 பிரேத பரிசோதனை அறிக்கையை ஒப்பிட்டு ஸ்ரீமதி தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கை!!

 
ஸ்ரீமதி

மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்த வழக்கில் நாளுக்கு நாள் திடீர் திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக ஸ்ரீமதியின் சார்பில் உள்ள வழக்கறிஞர் பேட்டி கொடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்தது. மாணவியின் மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மாணவியின் உடல் பிரேத பரிசோதனை, மற்றும் மறு பிரேத பரிசோதனை அறிக்கைகளில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று மாணவியின் பெற்றோர் தெரிவித்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஸ்ரீமதி

அதன்படி ஜிப்மர் மருத்துவ குழுவினர் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்து அது குறித்த தங்களது அறிக்கையை கடந்த 22-ம் தேதி  மாலை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி காலை மாணவியின் தாயார் செல்வி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவினை விசாரித்த நீதிபதி புஷ்பராணி 24-ம் தேதி காலை ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையின் நகலை பெற்று கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்த நிலையில், உடற்கூறு ஆய்வறிக்கை இரண்டு மட்டுமே வழங்கபட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை வழங்க நீதிபதி புஷ்பராணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீமதி

அந்த அறிக்கையில், மண்டை ஓட்டின் பின்புறத்தை தவிர வேறு வெளிப்புற காயங்கள் தலையில் இல்லை என்றும்,  இறந்த மாணவியின் வலது மார்பகத்தில் 3 காயங்கள் உள்ளதாகவும் ஸ்ரீமதி தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், வலது பக்கம் விலா எலும்பு அனைத்தும் முறிந்து உள்ளது,  மேலிருந்து கீழே விழுவதால் எந்த வகையிலும் விலா எலும்பு முறிய சாத்தியமில்லை,  வலது பக்கம் கல்லீரல் சிதைவு ஏற்ப்பட்டுள்ளதாகவும், உயரத்தில் இருந்து விழுவதால் இந்த சிதைவு ஏற்பட சாத்தியமில்லை என ஸ்ரீமதி தரப்பு புகார் தெரிவித்துள்ளது.

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web