இன்று ஆடிப் பூரம்! பிள்ளை வரம் வேணும்னா அம்மனுக்கு இதை வாங்கி கொடுங்க!
ஆடிப்பூரம் தமிழகம் முழுவதுமே இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தை ஆடிப்பூரமாக கொண்டாடுகிறோம். ஆடி மாதத்தின் பூரம் நட்சத்திரத்தில் தான் ஆண்டாள் பிறந்தார். சைவர்கள், வைணவர்கள் என்கிற பாகுபாடு எல்லாம் கிடையாது. அம்பாளுக்கு அனைவருமே பிள்ளைகள் தான். ஆடி மாதம் முழுவதுமே அம்மன் மாதம் தானே?
பிள்ளை வரம் வேண்டி தவம் கிடப்பவர்கள் இந்த ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் வாங்கி அணிவித்து மகிழுங்கள். ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் கொண்டாடப்படும். உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினமும் ஓர் ஆடி மாதத்தின் பூர நட்சத்திரத்தன்று தான்.

தாய்மை பேறுக்காக தவமிருக்கும் பெண்கள் அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவதற்காக வளையல்களை வாங்கிக் கொடுத்து தங்களுக்கும் விரைவில் வளைகாப்பு நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அம்மனுக்கு வளையல் மாலை சாற்றி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுவது கூடுதல் சிறப்பு, அம்மன் வளையல் அணிய ஆசைப்பட்டதாக ஐதீகம் உள்ளது. அதனால் அம்மனுக்கு வளையல் சாற்றி வழிபட்டால் நினைத்ததை அம்மன் செய்வார் என்பது அதீத நம்பிக்கை.
அம்பாளுக்கு வளையல் அணிவிக்கும் போது ஒற்றைப்படை அல்லது 108 வளையல் அணிவித்து வழிபட்டு அதை பூஜையில் கலந்து கொண்டோருக்கோ, கோயில் எனில், கோவிலுக்கு வந்திருப்பவர்களுக்கோ கொடுத்து கொண்டாட வேண்டும்.
இன்று அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வளையல்களை வாங்கி பெண்கள் அணிந்து கொண்டால், குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அம்மன் ஆலயங்களுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி ஆனந்தப்பட்டால் அகில உலகமே மகிழ்ச்சியடையும் தானே.

பெண்கள் கை நிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா என்ன? அவளும் பெண் தானே.
சக்தி தேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக் கொண்டாள் தெரியுமா?
ஆந்திராவைச் சேர்ந்த வளையல் வியாபாரி ஒருவர் சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். அப்படி, ஒரு நாள் கொண்டு வந்திருந்த வளையல்களில் பாதி விற்று விட்டார். மீதி இருந்த வளையல்களை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். பெரிய பாளையம் அருகே வரும் போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார்.
இதனால், அங்கிருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்து விட்டு, அங்கேயே தூங்கி விட்டார். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்த போது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்று முற்றும் தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்று விட்டார்.
அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார் எனக் கூறி மறைந்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?
