இன்று பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு விடுமுறை! மயிலாடுதுறை கலெக்டர் அறிவிப்பு!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கடைமுக தீர்த்த வாரி நடைப்பெற உள்ளதையடுத்து உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புகழ் பெற்ற வைத்தியநாத சுவாமி ஆலயம் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றது. பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஐப்பசி துலா உற்சவத்தில் கலந்து கொள்ள திரள்வார்கள். பக்தர்கள் தன்னிடம் வந்து, பாவங்களைக் கழுவி புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச் சுமைகளின் காரணமாக கங்கை நதி உள்ளிட்ட அனைத்து நதிகளும் கருமை நிறம் அடைந்தன. பின்னர் அனைத்து  ஜீவநதிகளும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் வந்து புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கி கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் கொண்டாடப்படுகிறது. அப்போது சிவாலயங்களில் இருந்து சாமி புறப்பாடாகி, துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். 

வழக்கம் போல் இந்த வருடம் ஐப்பசி மாதம் 1ம் தேதி துலா உற்சவம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவிலில் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான திருக்கல்யாணம் தேரோட்டம் நேற்று (15ம் தேதி) நடைபெற்ற நிலையில், கடைமுக தீர்த்தவாரி இன்று நவம்பர் 16ம் தேதி நடைபெறுகிறது. 

மயிலாடுதுறை

பல்வேறு சிவாலயங்களிலும் இது போல் உற்சவங்கள் தொடங்கியுள்ள நிலையில் இன்று 16ம் தேதி கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளளார். இன்றைய விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ம் தேதி பணி நாளாக செயல்படும் என்றும் கலெக்டர் லலிதா அறிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web