இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் நீர்நிலைகள் உயர்ந்த நிலையில், மழைநீர் இன்னும் வடியவில்லை. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பல இடங்களில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி விவசாயிகள் கதறுகின்றனர்.

#BREAKING: சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த கனமழையில் மயிலாடுதுறை, கடலூர், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகளவில்  பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீர்காழியில் தொடர்ந்து பெய்த கனமழையினால், தேங்கிய குளம் போலவே சீர்காழி காட்சியளித்தது. 

கனமழை எதிரொலி!! 23 மாவட்டங்களில் விடுமுறை !!

இந்நிலையில் மழை விட்ட பிறகும், பல இடங்களில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி முழுமையாக முடியவில்லை. பள்ளிகளில் வெள்ளம் புகுந்து தீவு போலவே காட்சியளிக்கின்றன. இன்றும் மழை நீரை வெளியேற்றும் பணி நடைப்பெறுவதால், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web