8ம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இன்று சீர்காழி தாலுக்காவில் உள்ள அனைத்து பள்ளி  மாணவர்களுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த வாரத்தில் தொடர்ந்து  பெய்த கனமழையால், அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீர்காழியும் ஒன்று. கடந்த 122 வருடங்களில் இல்லாத அளவு மழை கொட்டித் தீர்த்தது.

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! கனமழை எதிரொலி!!

இந்த தொடர் கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி , டெல்டா மாவட்டங்கள் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்து கொண்டது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளநீர் புகுந்த பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தாழ்வான பகுதிகளில் மட்டுமல்லாமல், அரசு பள்ளிகளிலும் மழை நீர் புகுந்தது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், மறுசீரமைப்பு பணிகள் காரணமாகவும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று நவம்பர் 18ம் தேதி 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் லலிதா அறிவித்துள்ளார். மாணவர்கள் இந்த விடுமுறையைப் பயன்படுத்தி வெளியே சுற்றாமல், வீட்டில் பாதுகாப்பாக இருக்கவும், பயனுள்ள முறையில் விடுமுறையைக் கழிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web