இன்றே கடைசி!! 2748 பணியிடங்கள் !! உடனே அப்ளை பண்ணுங்க!!

 
கிராம உதவியாளர் பணியிடங்கள்

தமிழகத்தில்  கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய்த்துறை  மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் , விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணியின் பெயர்: கிராம உதவியாளர் 

மொத்த பணியிடங்கள்: 2,748 

கிராம உதவியாளர் பணியிடங்கள்

கல்வத் தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.11,100 முதல் ரூ.35,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு வயது-37 (BC, BC(M), MBC/DNC, SC, SC(A), ST), மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வரம்புடன் 10 ஆண்டுகள் கூடுதலாக கணக்கில் கொள்ளப்படும், முன்னாள் இராணுவத்தினர்களுக்கு பொதுப் பிரிவு வயது-48, இதர பிரிவினருக்கு வயது-53 ஆகும்.

தமிழக அரசு

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் படித்தல்‌, எழுதுதல்‌ திறனறித்‌ தேர்வு மற்றும்‌ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். படித்தல்‌, எழுதுதல்‌ திறனறித்‌ தேர்வு 30.11.2022 அன்றும் நேர்காணல் ஆனது 15.12.2022 முதல் 16.12.2022 வரையிலும் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவம்‌ தேர்வு முறை குறித்த இதர விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ சம்மந்தப்பட்ட வருவாய்‌ வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலிருந்தும்‌ பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 07.11.2022 மாலை 5:45 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2022

From around the web