இன்றே கடைசி!! ஆன்லைனில் திருத்தம் செய்ய மறந்திடாதீங்க!!

 
tet exam

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டன. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 26ம் தேதி வரை வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1க்கு 2,30,878 பேரும், தாள் 2க்கு 4,01,886 என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

tet exam
விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கைகள் தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன. விண்ணப்பத்தாரர்களின் கோரிக்கையினை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஜூலை 24ம் தேதி முதல் வழிவகை செய்யப்பட்டது. விண்ணப்பதாரரின் அலைபேசி எண், இமெயில் முகவரி கல்வி தகுதியில் மாற்றம் செய்ய இயலாது என அறிவிக்கப்பட்டது. 

TET Exam
அதன்படி  ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத்தில்    trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் ஜூலை 27ம் தேதி வரை திருத்தம் செய்யலாம் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் படி விண்ணப்பிக்க  இன்றே  கடைசி நாள். மாற்றம் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு மேலும் மாற்றம் செய்யக்கூடாது எனவும் , விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுகளான தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்ய இயலாது எனவும் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web