நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! தொடர்மழை எதிரொலி!!

 
மழை

அக்டோபர் 29 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனடிப்படையில்  தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள்  மற்றும் புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அத்துடன் வடதமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகனமழை  காரணமாக எச்சரிக்கையால் 27 மாவட்டங்களுக்கு  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மழை
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதனால் நவம்பர் 14ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நேற்று முதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. 

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!! மிக கன மழை எச்சரிக்கை!!
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை சுற்றி உள்ள மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் பல பகுதிகளில் கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.  நாளையும் கனமழை தொடரும்  என்பதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை நவம்பர் 12 ம் தேதி சனிக்கிழமையும்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web