நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் உத்தரவு!

 
மாணவிகள் விடுமுறை மகிழ்ச்சி

நாளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய தாலுக்காக்களைத் தவிர்த்து விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.

மருது சகோதரர்கள்

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 1801-ம் ஆண்டு மாமன்னர் மருது சகோதரர்கள் ஆங்கிலேய அரசால், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். பின்னர் மூன்று தினங்களுக்கு பின் மருது சகோதரர்களின் உடல்கள் அவர்கள் கட்டிய காளையார்கோயில் எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணமடைந்த மருது சகோதரர்களின் குருபூஜை விழாவை அரசு விழாவாக தமிழ்நாடு அரசு கடைபிடித்து வருகிறது.

மருது சகோதரர்கள்

இந்நிலையில் நாளை (அக். 27) மருதுசகோதரர்களின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி தவிர்த்து 6 தாலுகாக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக். 27) விடுமுறை விடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web