நாளை ஆடிப்பெருக்கிற்கு உள்ளூர் விடுமுறை!! கலெக்டர் அதிரடி!!

 
ஆடிப்பெருக்கு

நாளை ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு தமிழகம்  முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்ட அளவில் நடைபெறும் உள்ளூர் திருவிழாக்கள், சிறப்பு நிகழ்வுகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை

அதன்படி, நாளை ஆகஸ்ட் 3ம் தேதி  ஆடிப்பெருக்கை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இதனை ஈடுசெய்யும் வகையில் 27ம் தேதி சனிக்கிழமை  பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாளை பள்ளி, கல்லூரிகள் , அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தர்மபுரி
ஆடிப்பெருக்கிற்கு புதுமணத் தம்பதிகள், பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரையில் வழிபாடு நடத்துவர். காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 21 நாட்களாக ஆற்றில் பொதுமக்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web