நாளையே கடைசி!! டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க மறந்திடாதீங்க!!!

 
டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நடப்பாண்டில் கொரோனாவிற்கு முந்தைய கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  குரூப்-1 தேர்வு மூலம் 92 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள குரூப் 1 போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை ஆகஸ்ட் 22ம் தேதி திங்கட் கிழமை  கடைசி நாளாகும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 இந்நிலையில் குரூப் 1 தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpsc.gov.in / www.tnpscexams.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், விண்ணப்பத்தாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தங்களது பதிவு எண்/கடவுச் சொல்லை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள கல்வி விவரங்கள் குறித்த தகவல்களை குறிப்பிட வேண்டும்.மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், அரசுப் பணியாளர் போன்ற சிறப்புப் பிரிவு தேர்வர்கள் அதற்கான சான்றிதழ் விவரங்களை அளிக்க வேண்டும். இதில் முக்கியமானது, நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை தமிழ் மொழியில் பயின்று இருந்தால் அதற்கான இடஒதுக்கீடு கோரலாம். மேலும் உடற்தகுதி (உயரம், மார்பின் அளவு) உள்ளிட்ட விவரங்கள் சமர்பிக்க வேண்டும்.முதநிலைத் தேர்வுக்கு இரண்டு விருப்ப மாவட்டங்களில் இருந்து தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். முதன்மைத் தேர்வுக்கு ஏதேனும் ஒரு மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இறுதியாக, தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி

விண்ணபப்தாரர் மீது எந்தவித குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்திருக்கக் கூடாது. விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் தவறாக இருந்தால், தெரிவின் எந்த நிலையிலும் இருந்தும் விண்ணப்பபம் நிராகரிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.மேலும், இணையவழி மூலம் நாளை ஆகஸ்ட் (22 ம் தேதி  மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும், பின்னர் அச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web