நாளை ப்ளஸ் 2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு!!

 
தேர்வுகள்

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில்  தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வு எழுதியவர்களுக்கான பிளஸ் டூ துணை தேர்வு மதிப்பெண் பட்டியல் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண் பட்டியலை நாளை ஆகஸ்ட் 22ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் குறித்து ஆலோசனை
பதிவிறக்கம் செய்வது எப்படி?

அரசு தேர்வுகள் இயக்ககம்
அதிகாரப்பூர்வ இணையதளமான http://dge.tn.gov.in ல் தேர்வு எண், பிறந்த தேதி பதிவிட வேண்டும்.  இந்த தகவலை சரிபார்த்து உள்ளிட மதிப்பெண் பட்டியலை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . இந்த மதிப்பெண் பட்டியலில் மாறுபாடு இருப்பின்  ஆகஸ்ட் 24 25 ஆகிய தேதிகளில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 
மேலும், விடைத்தாள் நகல் பெற ரூ.275ம், மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305ம், ஏனைய பாடத்திற்கு ரூ.205ம் கட்டணமாக  செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web