சோகம்!! மாவு மெஷினில் துப்பட்டா சிக்கியதால் தலை மோதி பெண் நூலகர் மரணம்!!

 
கன்னிகா பரமேஸ்வரி


திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே வசித்து வருபவர் முரளி. இவர் தானியங்கள் அரைக்கும் மாவாலை ஒன்றை நடத்தி வந்தார்.  இவரது மனைவி கன்னிகா பரமேஸ்வரி இருணாப்பட்டு பகுதியில் நூலகத்தில் நூலகராக பணிபுரிந்தார்.நவம்பர் 12ம் தேதி சனிக்கிழமை நேற்று விடுமுறை என்பதால் கன்னிகா பரமேஸ்வரி அரவை மில்லில் தானியங்களை அரைத்துக் கொண்டு இருந்தார்.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

திடீரென எதிர்பாராத விதமாக கன்னிகா பரமேஸ்வரியின் துப்பட்டா ரைஸ்மில் இயந்திரத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டது. இதனால் , கன்னிகா பரமேஸ்வரி இயந்திரத்தின் மீது மோதி தலையில் பலத்த காயம் அடைந்தார். சம்பவ இடத்திலேயே  ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து  உயிரிழந்தார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

போலீஸ்
தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web