சோகம்!! பிரபல சின்னத்திரை நடிகை விபத்தில் பலி!!

 
கல்யாணி குராலே


சின்னத்திரை நடிகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றவர் கல்யாணி குராலே. இவர் மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர்.  கல்யாணி குராலே மகாராஷ்டிரா கோலாப்பூரில் வசித்து வந்தார். டிவி நிகழ்ச்சிகளை தொடர்ந்து கோலாப்பூர் அருகே ஹலோண்டியில் உணவகம் ஒன்றை திறந்தார். தினமும் இரவு உணவகத்தை மூடிவிட்டு இரு சக்கர வாகனத்தில் இருப்பிடம் திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார்.  

விபத்து

வழக்கமாக இரவு ஓட்டலை மூடிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் கோலாப்பூர் செல்வது வழக்கம்.  அதே போல் இரவு 10.30 மணிக்கு தனது ஓட்டலை மூடிவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது  சாங்கிலி-கோலாப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த காங்க்ரீட் மிக்ஸர் ஏற்றி வந்த லாரி அவரின்  இரு சக்கர வாகனம் மீது மோதியது.

rip

இதில் கல்யாணி பலத்த காயம் அடைந்தார். தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவஇடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை படுகாயம் அடைந்த கல்யாணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவரது இறப்பிற்கு பிரபலங்கள், திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web