சோகம்!! கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி!! முதல்வர் நிவாரண உதவி அறிவிப்பு!!

 
கட்டிட விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர் . பல வீடுகளில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அந்த வகையில்  லக்னோவில் தில்குஷா கன்டோன்மென்ட் ஏரியாவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலியாகினர். 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் லக்னோ சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிட விபத்து

உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் ஸ்ரீ சூர்ய பால், இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "தில்குஷா பகுதியில் ராணுவ குடியிருப்பை ஒட்டி சில தொழிலாளர்கள் குடிசை அமைத்து வசித்து வந்தனர். கடுமையான மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்து விட்டது. இந்த கோர விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர்.

யோகி ஆத்தியானந்த்

ஒருவர் மட்டும் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். உத்திர பிரதேச முதல்வர் யோகிஆதியாத்ந்த்  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு  ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் லக்னோவில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் லக்னோ மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web