சோகம்!! மழை நீர் பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி பலி!! விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்!!

 
பள்ளம்


 

தேனி மாவட்டம் சின்னமன்னூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது மகள் கார்த்திகாவுக்கு திருமணமாகி 8 வயதில் ஹாசினி ராணி மகள் இருக்கிறார்.இந்நிலையில் தாத்தா ரங்கநாதன் வீட்டிற்கு சிறுமி ஹாசினி ராணி சென்றார்.  இவரது வீடு அமைந்துள்ள பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூங்கா அமைப்பதற்காக 5 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக அந்த சுற்று வட்டாரப் பகுதியில் தொடர் மழை பெய்ததால் அந்த 5 அடி ஆழ பள்ளத்தில் மழைநீர் நீர் நிரம்பியுள்ளது.

இதில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினி ராணி தெரியாமல் விழுந்துள்ளார். விளையாடச் சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்குள் வராததால் சந்தேகமடைந்த தாய் கார்த்திகா வெளியில் சென்று பார்த்தார். பின்னர் 5 அடி பள்ளத்தின் அருகில் மகளின் செருப்பு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.

கார்த்திகாவின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பள்ளத்தில் இருந்து சிறுமியை மீட்டனர். மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை உடனடியாக சின்னமன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதை கேட்ட கார்த்திகா மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று  சிறுமி ஹாசினி ராணியின் உடலை மீட்டு  தேனி அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர்  குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகம் தோண்டிய பள்ளத்தில் மழைநீர் நிரம்பியதால் அதில் விழுந்து பலியான 8 வயது சிறுமி மரணத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், சோகமும் நிலவுகிறது. அஜாக்ரதையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொது மக்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்

From around the web