சோகம்!! பிரபாகரனாக நடித்த இலங்கை தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்!!

 
நடிகர் தர்ஷன் தர்மராஜ்

இலங்கை சினிமாத்துறையில் குறிப்பிடத்தக்க தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் இன்று காலமானார்.  திடீர் உடல்நலக்குறைவு  காரணமாக அவர் கொழும்பிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவரது  உடல்நிலை மோசமாதனை அடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இவர் இலங்கை தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட 'பிரபாகரன்', 'சுனாமி' உட்பட 25க்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தார். சினிமா துறையில் திறம்பட பணியாற்றி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

2008ஆம் ஆண்டு வெளியான 'பிரபாகரன்' எனும் இருமொழி திரைப்படத்தில் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாகப் பாத்திரமேற்று நடித்திருந்தார்.  இதனையடுத்து பிரபாகரன் திரைப்படமும், தர்ஷனும் சில தரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.அசோக ஹந்தகம இயக்கி 2012ஆம் ஆண்டு வெளியான 'இனி அவன்தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தமைக்காக தர்ஷனுக்கு சிறந்த நடிகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்திருந்தன. இந்தத் திரைப்படம் பிரான்ஸ் நாட்டின் 'கான்' திரைப்பட விழாவில்  2012ஆம் ஆண்டு பிரன்ச் மொழி உப தலைப்புக்களுடன் திரையிடப்பட்ட மைகுறிப்பிடத்தக்கது.

2018ஆம் ஆண்டு வெளியான 'கோ'மாளி கிங்ஸ்' முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாக அமைந்திருந்தது. இறுதியாக இவர் 'ரெல்ல வெரல்லட் ஆதரே' மற்றும் 'கொலம்ப' ஆகிய சிங்களத் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  தர்ஷன் தனது 41 வயதில் காலமானார். இவரது இறப்புக்கு  திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

From around the web