சோகம்!! பள்ளிப்பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி மாணவன் பலி!!

 
திவாகர்

கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு பள்ளிகளில் மாணவர்களின் அட்டகாசங்கள், அலப்பறைகள்  தாங்க முடியவில்லை. பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களிடம் காலில் விழாத குறையாக மன்றாடி கேட்கின்றனர். இருந்தாலும் மன அழுத்தம், படிக்கட்டில் பயணம்,சகமாணவனை துன்புறுத்தல் ராகிங் என அவர்களின் அலப்பறைகள் தொடர்ந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த  தமிழக அரசு சார்பில் பள்ளி நிர்வாகங்களும், ஆசிரியர்களும்  பல்வேறு  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.ஈரோடு மாவட்டம் பவானி அருகே குதிரைக்கல் மேடு பகுதியில் வசித்து வருபவர் மாதையன். இவரது மனைவி தங்கமணி தம்பதியினர். இவர்களின் 13 வயது  மகன் திவாகர்.  இவர், பூதபாடி அருகே உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளிப்பேருந்து

 இன்று காலை வழக்கம்போல பள்ளி செல்வதற்காக குதிரைக்கல் மேடு பேருந்து நிறுத்ததில் வந்து பள்ளியின் பேருந்தில் ஏறி மாணவன் சென்றுள்ளார். மேலும் பள்ளி பேருந்தில் கிளீனர் இல்லாததால்  மாணவன் படிக்கட்டில் நின்று கொண்டே பயணம் செய்தான். இந்நிலையில் பள்ளி பேருந்து கோடோரிபட்டு பகுதி நோக்கி சென்றபோது, ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால் படியில் நின்றிருந்த மாணவன் திவாகர் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளான்.

பள்ளிப்பேருந்து

அப்போது பள்ளி பேருந்தின் பின் சக்கரம் மாணவனின் தலை மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே மாணவன் தலை நசுங்கி உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார், மாணவனின உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web