சோகம்!! உயிரிழந்தவரை காப்பாற்ற சென்ற போது இருவர் படுகாயம்!!

 
சிலிண்டர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில்  வசித்து வருபவர்  அழகர்சாமி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன். திருமணமான இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சம்மந்தபுரம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மன அழுத்தம் காரணமாக இவர் தனது மனைவியிடம் தகராறில் ஈடுப்பட்டு மதனிப்பட்டியில் வசிக்கும் தனது அக்கா முத்துமாரி வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

சிலிண்டர்

இந்நிலையில் அக்கா முத்துமாரி மற்றும் அவரது கணவர் மாரிமுத்து இருவரும் வேலைக்கு சென்று நிலையில் வழக்கம்போல் அக்கா வீட்டிற்கு வந்த கோபாலகிருஷ்ணன் அதிக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இங்கு வரும் முன்பே தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த அவர், அக்கா முத்துமாரி வீட்டில் இருந்த சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

சமையல் எரிவாயு வாடை தெரு முழுவதும் பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து சென்று பார்த்ததில் கோபாலகிருஷ்ணன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக அவரைக் காப்பாற்றும் நோக்கத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, ராமசுப்பு ஆகிய இருவரும் உள்பக்கமாக பூட்டியிருந்த கதவினை இயந்திரம் கொண்டு அறுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது டிரில்லிங் மிஷினில் இருந்து நெருப்பு பொறி வெளியேறியதால் ஏற்கனவே வீட்டில் கசிந்திருந்த சமையல் வாயுடன் இணைந்ததால் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. கோபாலகிருஷ்ணனை காப்பாற்ற சென்ற கருப்பசாமி மற்றும் ராமசுப்பு இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

virudhunagar

இந்த சம்பவத்தில் உடலில் 50 சதவீத தீ காயங்களுடன் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்த கோபாலகிருஷ்ணன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அருகில் இருந்த அவரது தங்கை வீட்டிற்குள் சென்று கதவை தாளிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிலிண்டர் வெடித்துச் சிதறிய நெருப்பை அணைக்க வந்த தீயணைப்புத் துறையினர் இது குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு காவல் நிலைய போலீசார் கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன அழுத்தத்தில் சிலிண்டரை திறந்து வைத்துவிட்டு தற்கொலை முயன்ற பொழுது அவரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web