சோகம்! சல்மான் ருஷ்டியின் ஒரு கை செயலிழந்தது.. பார்வை பறிபோச்சு! மேலாளர் தகவல்!

 
சல்மான்

நியூயார்க்: உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 75 வயதாகும் இவர் சாட்டானிக் வெர்சஸ் (சாத்தானின் கவிதைகள்) என்ற நாவலை 1989ல் வெளியிட்டார். இதற்காக ஈரான் மதத்தலைவர் அயத்துல்லா கொமேனியால் பட்வா (மரண தண்டனை) விதிக்கப்பட்டார்.

சல்மான்

இந்த அச்சம் காரணமாக பல ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்த சல்மான் ருஷ்டி, சமீபத்தில் நியூயார்க்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைப்பெற்ற ஒரு இலக்கிய கூட்டத்தில் பங்கேற்ற போது 24 வயது இளைஞன் ஒருவன், சல்மான் ருஷ்டியை கத்தியால் பல்வேறு  இடங்களில் குத்தினான். குற்றுயிரும் குலையுயிருமாக மேடையிலேயே கீழே சரிந்த சல்மான் ருஷ்டியை அங்கே இருந்தவர்கள் மீட்டு, ஹெலிகாப்டர் மூலமாக விரைந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

சல்மான் ருஷ்டி

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ருஷ்டியின் ஒரு கண் பார்வை பறிபோய் விட்டதாகவும் , அவரது ஒரு கையில் நரம்புகள் துண்டிக்கப் பட்டதால் அந்த கை செயல்பாட்டை இழந்து விட்டதாகவும் அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web